அதிகரிக்கும் தங்கம் விலை.. வரலாறு காணாத புதிய உச்சத்தில் வெள்ளி விலை - இன்றைய நிலவரம் என்ன?

  தினத்தந்தி
அதிகரிக்கும் தங்கம் விலை.. வரலாறு காணாத புதிய உச்சத்தில் வெள்ளி விலை  இன்றைய நிலவரம் என்ன?

சென்னை, இந்தியாவில் தங்கம் விலை சர்வதேச அளவிலான வணிக சூழலை பொறுத்து தினசரி மாற்றியமைக்கப்படுகின்றன. தங்கம் விலையை பொருத்தவரை இந்த ஆண்டு துவக்கத்தில் இருந்தே தாறுமாறாக உயர்ந்து அதிகபட்சமாக ரூ.75,760 ஆக உயர்ந்தது. கடந்த 8ம் தேதி வரலாற்றில் உயர்ந்த உட்சபட்ச இந்த விலை உயர்வை எட்டியது. இதனைத்தொடர்ந்து கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து இறங்கு முகத்தில் காணப்பட்டு வந்ததால் நகை பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த சூழலில் நேற்று முன் தினம் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.9,230க்கும், சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ.73,840 க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்று சென்னையில் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.15 குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.9,215க்கும், சவரனுக்கு ரூ.120 குறைந்து, ஒரு சவரன் தங்கம் ரூ.73,720 க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று தங்கம் விலை மேலும் அதிகரித்துள்ளது. இதன்படி சென்னையில் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.100 உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.9,315க்கும், சவரனுக்கு ரூ.800 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ.74,520 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இன்று வெள்ளி விலை வரலாறு காணாத புதிய உச்சத்தை அடைந்துள்ளது. இதன்படி வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 உயர்ந்து, ஒரு கிராம் ரூ. 130க்கும். ஒரு கிலோ வெள்ளி 1,30,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த 5 நாட்களில் தங்கம் விலை நிலவரம்:- 23.08.2025 ஒரு சவரன் ரூ.74,520 (இன்று) 22.08.2025 ஒரு சவரன் ரூ.73,720 (நேற்று) 21.08.2025 ஒரு சவரன் ரூ.73,840 20.08.2025 ஒரு சவரன் ரூ.73,440 19.08.2025 ஒரு சவரன் ரூ.73,880 18.08.2025 ஒரு சவரன் ரூ.74,200

மூலக்கதை