தங்கம், வெள்ளி விலையில் மாற்றம்.. இன்றைய நிலவரம் என்ன..?
சென்னை,இந்தியாவில் தங்கம் விலை சர்வதேச அளவிலான வணிக சூழலை பொறுத்து தினசரி மாற்றியமைக்கப்படுகின்றன. தங்கம் விலையை பொருத்தவரை இந்த ஆண்டு துவக்கத்தில் இருந்தே தாறுமாறாக உயர்ந்து அதிகபட்சமாக ரூ.75,760 ஆக உயர்ந்தது. கடந்த 8ம் தேதி வரலாற்றில் உயர்ந்த உட்சபட்ச இந்த விலை உயர்வை எட்டியது. இதனைத்தொடர்ந்து கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து இறங்கு முகத்தில் காணப்பட்டு வந்ததால் நகை பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதன்படி சென்னையில் கடந்த 16-ந்தேதி தங்கம் விலை ஒரு கிராம் ரூ.9 ஆயிரத்து 275-க்கும், பவுன் ரூ.74 ஆயிரத்து 200-க்கும் விற்பனையானது. இதில் எந்தவித மாற்றமும் இன்றி கடந்த 18-ம் தேதி வரை தொடர்ந்தது. இந்த சூழலில் நேற்று முன்தினம் தங்கம் விலை சரிவை சந்தித்தது. இதன்படி ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.55 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.9.180க்கும், சவரனுக்கு ரூ.440 குறைந்து ஒரு சவரன் தங்கம் ரூ.73,440 க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து நேற்று ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.9,230க்கும், சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ.73,840 க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. இதன்படி சென்னையில் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.15 குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.9,215க்கும், சவரனுக்கு ரூ.120 குறைந்து, ஒரு சவரன் தங்கம் ரூ.73,720 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இன்று வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 உயர்ந்து, ஒரு கிராம் ரூ. 128க்கும். ஒரு கிலோ வெள்ளி 1,28,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த 5 நாட்களில் தங்கம் விலை நிலவரம்:- 22.08.2025 ஒரு சவரன் ரூ.73,720 (இன்று) 21.08.2025 ஒரு சவரன் ரூ.73,840 (நேற்று) 20.08.2025 ஒரு சவரன் ரூ.73,440 19.08.2025 ஒரு சவரன் ரூ.73,880 18.08.2025 ஒரு சவரன் ரூ.74,200




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
