மக்களால் தேர்வு செய்யப்படும் ஒருவரின் பதவி 30 நாட்களில் பறிபோகும்: ராகுல்காந்தி கண்டனம்

  தினத்தந்தி
மக்களால் தேர்வு செய்யப்படும் ஒருவரின் பதவி 30 நாட்களில் பறிபோகும்: ராகுல்காந்தி கண்டனம்

புதுடெல்லி,கடுமையான குற்றச்சாட்டுகளின் பேரில் கைது செய்யப்பட்டாலோ அல்லது தடுப்பு காவலில் வைக்கப்பட்டாலோ, பிரதமர், மத்திய அமைச்சர் அல்லது மத்திய இணையமைச்சரை பதவி நீக்கம் செய்வதற்கான புதிய சட்ட மசோதாவை மக்களவையில் அமித்ஷா தாக்கல் செய்தார். 30 நாட்களுக்கு மேல் கைதாகி சிறையில் இருந்தால் தானாகவே பதவி பறிபோகும் இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. மசோதாவை 31 பேர் அடங்கிய பாராளுமன்ற கூட்டுக்குழுவிற்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மசோதவை மக்களவையில் அமித்ஷா தாக்கல் செய்தபோது எதிர்க்கட்சி எம்.பிக்கள் மசோதாவின் நகலை கிழித்தெறிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே, இந்த மசோதாவிற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ள ராகுல் காந்தி, மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் ஒருவரின் பதவி 30 நாட்களில் பறிபோகும் என்று தெரிவித்துள்ளார். மேலும், மன்னரால் விரும்படாதவர்கள் அமலாக்கத்துறையால் கைதாவார்கள் என்றும் ராகுல் காந்தி காட்டமான விமர்சனத்தை வைத்துள்ளார். ராகுல் காந்தி மேலும் கூறுகையில், இடைக்காலத்திற்கு நாம் மீண்டும் திரும்புகிறோம். மன்னருக்கு உங்கள் முகம் பிடிக்காவிட்டால், அமலாக்கத்துறையை உங்கள் மீது வழக்குப்பதிவு செய்ய சொல்லுவார்” என்றும் கூறினார்.

மூலக்கதை