கந்துவட்டி கொடுமை: ஆற்றில் குதித்து பெண் தற்கொலை

திருவனந்தபுரம்,கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் கொட்டுவாலி பகுதியை சேர்ந்தவர் ஆஷா (வயது 46). இவரது கணவர் பென்னி. இதனிடையே, அதே பகுதியில் வசிக்கும் பிந்து - பிரதீப் குமார் தம்பதியிடமிருந்து அதிக வட்டிக்கு ஆஷா ரூ. 10 லட்சம் கடன் வாங்கியுள்ளார். ஆஷாவிடம் பிந்து - பிரதீப் குமார் தம்பதி கந்துவட்டி முறையில் ரூ. 10 லட்சம் கடனுக்கு ரூ. 20 லட்சம் வரை வசூல் செய்துள்ளனர். மேலும், கடன் முழுமையாக அடைக்கப்படவில்லை இன்னும் கடன் உள்ளது என கூறி ஆஷாவுக்கு தொல்லை கொடுத்துள்ளனர். ஆஷாவை இருவரும் சேர்ந்து நேற்று இரவு மிரட்டியுள்ளனர். இந்நிலையில், பிந்து - பிரதீப் குமார் தம்பதியின் மிரட்டலால் மன உளைச்சல் அடைந்த ஆஷா நேற்று இரவு கொட்டுவாலி பகுதியில் பாய்ந்த ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து தகவலறிந்த போலீசார், ஆஷாவின் உடல் இன்று காலை சடலமாக மீட்டனர். அதேவேளை, தனது தற்கொலைக்கு பிந்து - பிரதீப் குமார் தம்பதிதான் காரணம் என்று ஆஷா கடிதம் எழுதி வைத்துள்ளார். அந்த கடிதத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மூலக்கதை
