குட்டையில் மூழ்கி பள்ளி மாணவர்கள் 6 பேர் பலி; அதிர்ச்சி சம்பவம்

  தினத்தந்தி
குட்டையில் மூழ்கி பள்ளி மாணவர்கள் 6 பேர் பலி; அதிர்ச்சி சம்பவம்

அமராவதி, ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் அஸ்பரி மண்டல் கிராமத்தில் குட்டை உள்ளது. இந்த குட்டைக்கு அதே கிராமத்தை சேர்ந்த பள்ளி மாணவர்கள் 7 பேர் இன்று குளிக்க சென்றுள்ளனர். பள்ளி நிறைவடைந்து மாலை வீட்டிற்கு செல்லாமல் அனைவரும் குட்டையில் குளிக்க சென்றுள்ளனர். இதில், 6 பேர் குட்டையில் குளித்த நிலையில் ஒரு மாணவன் மட்டும் கரையில் அமர்ந்து இருந்தார். இந்நிலையில், குட்டையில் குளித்துக்கொண்டிருந்த 6 பேரும் திடீரென தண்ணீரில் மூழ்கினர். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த மாணவன் கிராமத்திற்கு சென்று தகவல் கொடுத்துள்ளான். இதைக்கேட்ட கிராமத்தினர் விரைந்து சென்று குட்டையில் மூழ்கிய 6 மாணவர்களையும் மீட்க முயற்சித்தனர். ஆனால், தண்ணீர் மூழ்கி 6 மாணவர்களும் உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து அறிந்த போலீசார் விரைந்து சென்று மாணவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மூலக்கதை