விநாயகர் சதுர்த்தியையொட்டி மைசூரு-நெல்லை இடையே சிறப்பு ரெயில் தென்மேற்கு ரெயில்வே அறிவிப்பு

பெங்களூரு, தென்மேற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- விநாயகர் சதுர்த்தி பண்டிகையையொட்டி பயணிகளின் வசதிக்காக மைசூரு-நெல்லை இடையே ஒருமுறை இயங்கும் சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளது. மைசூரு-நெல்லை சிறப்பு ரெயில் (வண்டி எண்: 06241) வருகிற 26-ந்தேதி இரவு 8.15 மணிக்கு மைசூருவில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 10.50 மணிக்கு நெல்லையை சென்றடையும். மறுமார்க்கமாக நெல்லை-மைசூரு சிறப்பு ரெயில் (06242) வருகிற 27-ந்தேதி மதியம் 3.40 மணிக்கு நெல்லையில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 5.50 மணிக்கு மைசூருவை வந்தடையும். இந்த ரெயில்கள் இருமார்க்கமாகவும் மண்டியா, கெங்கேரி, கே.எஸ்.ஆர். பெங்களூரு, பெங்களூரு கன்டோன்மென்ட், கே.ஆர்.புரம், பங்காருபேட்டை, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மூலக்கதை
