ரூ.67 ஆயிரம் கோடியில் 97 தேஜஸ் போர் விமானங்கள் - மத்திய அரசு ஒப்புதல்

புதுடெல்லி, பிரதமர் மோடி தலைமையில் நடந்த மந்திரி சபை கூட்டத்தில், 97 இலகுரக தேஜஸ் ரக போர் விமானங்களும், 6 மேம்பட்ட வான்வழி எச்சரிக்கை மற்றும் கட்டுப்பாட்டு விமானங்களை ரூ.85 ஆயிரம் கோடி மதிப்பில் கொள்முதல் செய்ய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. தேஜஸ் விமானங்களின் கொள்முதல் விலை ரூ.67 ஆயிரம் கோடியாகவும், வான்வழி எச்சரிக்கை மற்றும் கட்டுப்பாட்டு விமானங்களின் விலை ரூ.18 ஆயிரம் கோடியாகவும் இருக்கும் என்று தெரிகிறது. தேஜாஸ் விமானத்தை முதலில் பயன்படுத்திய படைப்பிரிவு, பிளையிங் டேகர்ஸ் என்று அழைக்கப்படும் 45-ஆவது படைப்பிரிவு ஆகும். ஆரம்பத்தில் 40 எல்சிஏ தேஜாஸ் எம்கே 1 விமானங்கள் வாங்கப்பட்டன. அதில் 35 விமானங்கள் இதுவரை இந்திய விமானப்படையில் சேர்க்கப்பட்டுள்ளன. தேஜாஸ் விமானம், இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட ஒரு முக்கியமான போர் விமானம். இது, பல ஆண்டுகளாக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் முயற்சியால் உருவாக்கப்பட்டது.
மூலக்கதை
