மேலும் குறைந்த தங்கம் விலை: நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி.. இன்றைய நிலவரம் என்ன..?
சென்னை, தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. இதன்படி, கடந்த 6-ந் தேதி ஒரு பவுன் ரூ.75 ஆயிரத்தை தாண்டியது. கடந்த மாதம் (ஜூலை) 23-ந் தேதிக்கு பிறகு விலை சரிவடைந்து வந்த நிலையில் மீண்டும் இந்த உச்சத்தை தொட்டது. அதன் தொடர்ச்சியாகவும் விலை குறைந்தபாடில்லை.மீண்டும் ஏறுமுகத்திலேயே பயணித்தது. இதனால் கடந்த 8-ந் தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.75,760-க்கு விற்பனையாகி இதுவரை இல்லாத வரலாறு காணாத உச்சத்தை பதிவு செய்தது. இதனைத் தொடர்ந்து விலை அதிரடியாக குறையத் தொடங்கியது.இந்நிலையில் 7வது நாளாக இன்றும் தங்கம் விலை இறங்கு முகத்திலேயே தொடர்ந்து காணப்படுகிறது. அதன்படி இன்று சென்னையில் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.9,275க்கும், சவரனுக்கு ரூ.40 குறைந்து ஒரு சவரன் தங்கம் ரூ.74,200க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் 127 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 1,27,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 5 நாட்களில் தங்கம் விலை நிலவரம்:- 16.08.2025 - ஒரு சவரன் ரூ.74,200 (இன்று) 15.08.2025 - ஒரு சவரன் ரூ.74,240 (நேற்று) 14.08.2025 - ஒரு சவரன் ரூ.74,320 13.08.2025 - ஒரு சவரன் ரூ.74,320 12.08.2025 - ஒரு சவரன் ரூ.74,360 11.08.2025 - ஒரு சவரன் ரூ.75,000 10.08.2025 - ஒரு சவரன் ரூ.75,560




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
