உள்ளாடைக்குள் 3 மலைபாம்புகளை வைத்து கடத்திய இலங்கையர் கைது - லங்காசிறி நியூஸ்
உள்ளாடைக்குள் வைத்து பாம்புகளை கடத்தியதில் இலங்கை நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கையை சேர்ந்த ஷெஹான் என அடையாளம் காணப்பட்ட நபர், தாய் ஏர்வேஸ் விமானம் மூலம், தாய்லாந்து தலைநகர் பாங்காங்கில் உள்ள சுவர்ணபூமி விமான நிலையத்திற்கு வருகை தந்துள்ளார். விலங்கு கடத்தல் பின்னணி கொண்ட அவரது வருகை குறித்து, விமான நிலைய அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனை தொடர்ந்து, விமான நிலையத்தில் அவரை தடுத்து நிறுத்திய அதிகாரிகள், அவரது உடமைகளை எக்ஸ்ரே ஸ்கேன் செய்தனர். ஆனால் எந்த சட்டவிரோத பொருட்களும் கிடைக்கவில்லை. அதன் பின்னர், அவரது உடலை சோதனையிட்டதில், அவரது உள்ளாடைக்குள் 3 பந்து மலைப்பாம்புகளை மறைத்து வைத்து கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கூடுதல் விசாரணைக்காக, காவலில் எடுத்து விசாரிக்கப்பட்டு வருகிறார். அனுமதியின்றி வனவிலங்குகளை ஏற்றுமதி செய்ய முயற்சித்தால், அவருக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, 1 மில்லியன் பாட் (இந்திய மதிப்பில் ரூ.26 லட்சம்) வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம். முன்னதாக 2024 ஆம் ஆண்டு, இலங்கையின் கொழும்பில் ஓநாய்கள், முள்ளம்பன்றிகள் மற்றும் உடும்புகள் உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகளை கடத்திய வழக்கில் ஏற்கனவே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
