யாழ்ப்பாண சர்வதேச புத்தகத் திருவிழா 2025: வெளியான முக்கிய அறிவிப்பு - லங்காசிறி நியூஸ்

சர்வதேச புத்தக திருவிழா விரைவில் யாழ்ப்பாணத்தில் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண வர்த்தக தொழில்துறை மன்றத்தின் சார்பில் 2025ம் ஆண்டுக்கான யாழ்ப்பாண சர்வதேச புத்தகத் திருவிழா விரைவில் நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புத்தக திருவிழா ஆகஸ்ட் 15ம் திகதி தொடங்கி ஆகஸ்ட் 17ம் திகதி வரை 3 நாட்கள் யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில் வைத்து நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண வர்த்தக தொழில் துறை மன்ற அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் இந்த அறிவிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.வெள்ளிக்கிழமை ஆரம்பமாகும் புத்தக திருவிழாவை தொடங்கி வைப்பதற்காக சிறப்பு விருந்தினராக வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகம் மற்றும் மூத்த எழுத்தாளர் கோகிலா மகேந்திரன் ஆகியோர் கலந்து கொள்கிறார். புத்தக திருவிழாவை தாண்டி, இந்த 3 நாட்கள் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
மூலக்கதை
