இந்த வேலைகளை ஏஐ-யால் செய்யவே முடியாது - மைக்ரோசாப்ட் வெளியிட்ட பட்டியல்
தகவல் தொழில் நுட்பத்தில் பெரும் புரட்சியை செயற்கை நுண்ணறிவு ஏற்படுத்திவிட்டது. செயற்கை நுண்ணறிவை பல முன்னணி நிறுவனங்களும் பயன்படுத்த தொடங்கியிருப்பதால் மென்பொருள் துறையில் வேலை இழப்புகள் தற்போதே ஆரம்பித்துவிட்டன. இதனால், வரும் ஆண்டுகளில் என்னவெல்லாம் நடக்குமோ என அச்சம் ஐடி துறையினர் மத்தியில் ஏற்பட்டுள்ளது. ஐடி துறையினர் மட்டுமின்றி பல துறைகளிலும் ஏஐ புகுந்து விளையாடும் என்று சொல்லப்படுவதால் பலரும் கலக்கம் அடைந்துள்ளனர். அதேவேளையில் ஏஐ பயன்பாடு காரணமாக வேலையின் திறன் கூடும் எனவும் வேலை வாய்ப்பு அதிகரிக்கவும் செய்யும் என்ற வாதமும் வைக்கப்படுகிறது. இதற்கிடையே ஏஐ வருகையால் எந்த துறைகளில் எல்லாம் வேலை இழப்பு ஏற்படும் எவை எல்லாம் பாதிக்கப்படாது? என்ற ஆய்வறிக்கையை மைக்ரோசாப்ட் நடத்தியுள்ளது. மைக்ரோசாப்ட் நடத்திய ஆய்வில், செவிலியர், மக்களிடம் இருந்து ரத்த மாதிரிகள் எடுப்பது, தீயணைப்பு பணி, எலக்ட்ரிஷியன் பணி, கப்பல் பொறியாளர்கள், டயர் பழுதுபார்ப்பவர்கள் , உள்ளிட்ட பணிகளை ஏஐ செய்ய முடியாது எனத்தெரிவித்துள்ளது. சில வேலைகளில் கண்டிப்பாக மனிதர்களின் ஈடுபாடு கட்டாயம் தேவைப்படும் அதை எக்காரணத்தை கொண்டும் ஏஐ தொழில்நுட்பத்தில் முழுவதுமாக ஒப்படைத்துவிட முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
