ஐ.பி.எல்.: மும்பைக்கு எதிராக டாஸ் வென்ற லக்னோ பந்துவீச்சு தேர்வு
மும்பை, 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. இதில் மாலை 3.30 மணிக்கு மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெறும் 45-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் விளையாடுகின்றன.5 முறை சாம்பியனான மும்பை அணி 9 ஆட்டங்களில் ஆடி 5 வெற்றி, 4 தோல்வி கண்டு புள்ளி பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது. அதேபோல் லக்னோ அணியும் 9 ஆட்டங்களில் விளையாடி 5 வெற்றி, 4 தோல்வி கண்டு புள்ளி பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது. இந்நிலையில் இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். அதன்படி மும்பை முதலில் பேட்டிங் செய்ய உள்ளது. லக்னோ அணியில் ஷர்துல் தாகூருக்கு பதிலாக மயங்க் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளார். மும்பை அணியில் 2 மாற்றங்களாக சாண்ட்னர் நீக்கப்பட்டு கரண் சர்மா, கார்பின் போஷ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இரு அணிகளுக்கான பிளேயிங் லெவன் பின்வருமாறு:- லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்: மார்க்ரம், மிட்செல் மார்ஷ், நிக்கோலஸ் பூரன், ரிஷப் பண்ட் (கேப்டன்), அப்துல் சமத், ஆயுஷ் பதோனி, திக்வேஷ் சிங் ரதி, ரவி பிஷ்னோய், அவேஷ் கான், பிரின்ஸ் யாதவ், மயங்க் யாதவ்மும்பை இந்தியன்ஸ்:- ரியான் ரிக்கல்டன், ரோகித் சர்மா, வில் ஜாக்ஸ், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்ட்யா (கேப்டன்), நமன் திர், கார்பின் போஷ், டிரென்ட் போல்ட், தீபக் சாஹர், கரண் சர்மா




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
