டெல்லியில் 3 நாட்கள் தங்கினால்... மத்திய மந்திரி எச்சரிக்கை
புதுடெல்லி, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை மந்திரி நிதின் கட்காரி, மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசியதாவது;டெல்லியில் நிலவும் கடுமையான மாசுபாடு அளவீடுகளை குறிப்பிட்ட அவர், டெல்லியில் தங்குவது சவாலான காரியம் என்றும், வாழ்நாளில் 10 ஆண்டுகள் குறைந்து விடும் என்றும் சொன்னார். "3 நாட்கள் அங்கு தங்கினீர்கள் என்று சொன்னால் உங்களுக்கு ஏதாவது தொற்று வந்துவிடும்." என்று கூட்டத்தினரைப் பார்த்து அவர் கூறினார்.மாசுபாட்டில் டெல்லி மற்றும் மும்பை ஆகிய நகரங்கள் சிவப்பு மண்டலத்தில் இருப்பதாகவும், இந்த சுற்றுச்சூழல் பாதிப்பு நிலையை அவசரமாக கவனிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். மாசுபாட்டை தடுப்பதற்கான தீர்வாக சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டை அவர் அவசியம் என குறிப்பிட்டார். மேலும், "மாசுபாட்டுக்கு பெட்ரோல் மற்றும் டீசல் பயன்பாடு களை காரணம். நாங்கள் கிட்டத்தட்ட ரூ. 22 லட்சம் கோடி மதிப்புக்கு புதை படிவ எரிபொருளை இறக்குமதி செய்கிறோம். இதற்கு பதிலாக மாற்று எரிபொருளை நான் ஆதரிக்கிறேன். புதை படிவ எரிபொருள் இறக்குமதியை குறைத்து, பசுமை எரிபொருள் பயன்பாட்டை அதிகரித்து விவசாயிகளின் பைகளில் ரூ.12 லட்சம் கோடி வரை சேமிக்க விரும்புகிறேன்" என்றார். அமெரிக்காவின் சிகாகோ பல்கலைக்கழகம் தயாரித்த காற்று தர குறியீட்டு அறிக்கையை மேற்கோள் காட்டி, மேற்கண்ட எச்சரிக்கை விஷயங்களை அவர் குறிப்பிட்டார்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
