பகத் பாசிலின் 'ஓடும் குதிரை சாடும் குதிரை' - பர்ஸ்ட் லுக் வைரல்

சென்னை:தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் பகத் பாசில். மலையாள படங்களின் மூலம் சினிமாவில் அறிமுகமான இவர் தற்போது தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் நடித்து வருகிறார். இவர் கேரள ரசிகர்களை தாண்டி தமிழ் ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்துள்ளார். தற்போது இவர் மலையாளத்தில் 'ஓடும் குதிரை சாடும் குதிரை' என்ற படத்தில் நடித்து வருகிறார். அல்தாப் சலீம் இயக்கும் இப்படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் இளம் நடிகை ரேவதி பிள்ளை முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.இந்நிலையில், ஆஷிக் உஸ்மான் புரொடக்சன்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இருக்கிறது. இந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது.A post shared by Kalyani Priyadarshan (@kalyanipriyadarshan)
மூலக்கதை
