'குட் பேட் அக்லி' படத்தில் நடிக்க மறுத்தது ஏன்? - 'பிரேமலு' நடிகர் விளக்கம்
சென்னை,அஜித் நடிப்பில் தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் குட் பேட் அக்லி. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி இருக்கும் இப்படம் கடந்த 10-ம் தேதி வெளியானது. இதில், திரிஷா அர்ஜுன் தாஸ், ஜாக்கி ஷெராப் மற்றும் ராகுல் தேவ் போன்ற பிரபலங்கள் நடித்துள்ளனர்.இப்படத்தில் அஜித்தின் மகனாக கார்த்திகேயா நடித்திருந்தார். இவர் 2023-ம் ஆண்டு வெளியான சாலரில் இளம் பிருத்விராஜாக நடித்திருந்தார். இந்நிலையில், குட் பேட் அக்லி படத்தில் அஜித்தின் மகனாக நடிக்க தன்னை இயக்குனர் ஆதிக் அணுகியதாகவும் ஆனால், அதில் நடிக்க முடியாமல் போனதாகவும் ‛பிரேமலு' படத்தில் கதாநாயகனாக நடித்த நஸ்லேன் கூறி இருக்கிறார்.இது தொடர்பாக அவர் கூறுகையில், ' 'குட் பேட் அக்லி படத்தில் அஜித்தின் மகனாக நடிக்க இயக்குனர் ஆதிக் என்னை அணுகி இருந்தார். அப்படம் இரண்டு ஷெட்யூலாக அதிக நாட்கள் எடுக்கப்பட இருந்தது. ஆனால் அந்த நேரத்தில் நான் 'ஆலப்புழா ஜிம்கானா' படத்தில் நடித்து வந்தேன். இதனால், குட் பேட் அக்லி-க்கு தேதி ஒதுக்க முடியாமல் போய்விட்டது' என்றார்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
