கொல்கத்தா அபார பந்துவீச்சு... பஞ்சாப் கிங்ஸ் 111 ரன்களில் ஆல் அவுட்
முல்லன்பூர்,18-வது ஐ.பி.எல். தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை 30 லீக் ஆட்டங்கள் நடந்து முடிந்துள்ளன. இந்நிலையில், இந்த தொடரில் முல்லன்பூரில் இன்று நடைபெற்று வரும் 31வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் ஆடி வருகின்றன.இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற பஞ்சாப் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. தொடர்ந்து பஞ்சாபின் தொடக்க வீரர்களாக ப்ரப்சிம்ரன் சிங் மற்றும் பிரியன்ஷ் ஆர்யா களம் இறங்கினர். இதில் பிரியன்ஷ் ஆர்யா 22 ரன், ப்ரப்சிம்ரன் சிங் 30 ரன் எடுத்து அவுட் ஆகினர்.இதையடுத்து களம் புகுந்த ஸ்ரேயாஸ் ஐயர் ரன் எடுக்காமலும், ஜோஷ் இங்கிலிஸ் 2 ரன்னிலும், நேஹல் வதேரா 10 ரன்னிலும், மேக்ஸ்வெல் 7 ரன்னிலும், இம்பேக்ட் வீரராக களம் புகுந்த சூர்யாஷ் ஷெட்ஜே 4 ரன்னிலும், மார்கோ ஜான்சென் 1 ரன்னிலும் அடுத்தடுத்து அவுட் ஆகினர். தொடர்ந்து ஷஷாங் சிங் மற்றும் பார்ட்லெட் ஜோடி சேர்ந்தனர். இதில் ஷஷாங் சிங் 18 ரன்னில் அவுட் ஆனார். இறுதியில் பஞ்சாப் அணி 15.3 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 111 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. பஞ்சாப் தரப்பில் அதிகபட்சமாக ப்ரப்சிம்ரன் சிங் 30 ரன் எடுத்தார். கொல்கத்தா தரப்பில் ஹர்ஷித் ராணா 3 விக்கெட் வீழ்த்தினார். தொடர்ந்து 112 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா ஆட உள்ளது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
