இருநாட்டு உறவுக்கு அச்சுறுத்தல்: வங்காளதேசத்தில் நடிகை கைது
டாக்கா,வங்காளதேசத்தை சேர்ந்த பிரபல நடிகை மேஹ்னா ஆலம். மாடலின் துறையில் இருந்து பின்னர் திரைத்துறையில் அறிமுகமான இவர் பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.இதனிடையே, வங்காளதேசத்தில் உள்ள சவுதி அரேபிய தூதரகத்தில் பணியாற்றி வந்த அதிகாரியும், மேஹ்னா ஆலமும் காதலித்து வந்துள்ளனர். அந்த தூதரக அதிகாரிக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி, குழந்தைகள் உள்ளனர். அதேவேளை, தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு தூதரக அதிகாரியான தனது காதலனிடம் மேஹ்னா ஆலம் கேட்டுள்ளார். ஆனால், மேஹ்னாவை திருமணம் செய்ய தூதரக அதிகாரி மறுத்துவிட்டார். இந்நிலையில், டாக்காவில் உள்ள வீட்டில் இருந்த மேஹ்னா ஆலமை வங்காளதேச போலீசார் நேற்று நள்ளிரவு கைது செய்தனர். வீட்டில் உறங்கிக்கொண்டிருந்தபோது அதிரடியாக நுழைந்த போலீசார், மேஹ்னா ஆலமை கைது செய்தனர். வங்காளதேசம், சவுதி அரேபியா இடையேயான இருநாட்டு உறவுக்கு அச்சுறுத்தலாக விளங்குவதால் மேஹ்னா கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட மேஹ்னாவை 30 நாட்கள் சிறையில் அடைக்க கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. அதேவேளை, மேஹ்னாவின் கைதுக்கு வங்காளதேசத்தில் பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.




காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
