ஹார்வர்டு பல்கலைக்கழகத்திற்கான பல ஆயிரம் கோடி நிதி உதவி நிறுத்தம்: டிரம்ப் அதிரடி
கேம்பிரிட்ஜ்,அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் பொறுப்பேற்ற நாளில் இருந்தே பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். உலக நாடுகள் மீது வரி விதிப்பு, குடியுரிமை கொள்கையில் கெடுபிடி என டிரம்ப் எடுக்கும் நடவடிக்கைகள் உலக நாடுகளை அதிரவைத்து வருகின்றன. இந்த நிலையில், உலக புகழ்பெற்ற ஹார்வர்டு பல்கலைக்கழகத்திற்கான மானியங்களை நிறுத்தி டிரம்ப் அதிரடி காட்டினார்.பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்கள் செயல்பாட்டை கட்டுப்படுத்தும் வகையில், ஹார்வர்டு பல்கலைக்கழகத்திற்கு டிரம்ப் கடிதம் எழுதி இருந்தார். அந்த கடிதத்தில், ''பல்கலைக் கழகத்தில் பல்வேறு சீர்திருத்தங்களைச் செய்ய வேண்டும். மாணவர்கள் சேர்க்கை தகுதி அடிப்படையில் மட்டுமே நடக்க வேண்டும்" உள்ளிட்ட்வை இடம் பெற்று இருந்தன. இதனை ஏற்க ஹார்வர்டு பல்கலைக்கழகம் மறுத்தது. இதனால், கோபம் அடைந்த டிரம்ப், ஹார்வர்டு பல்கலைக்கான 2.2 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பு படி ரூ. 18,858 கோடி) மானியங்களை நிறுத்தியுள்ளார். மேலும், 60 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பு படி ரூ. 514 கோடி ரூபாய்) ஒப்பந்தங்களையும் டிரம்ப் நிர்வாகம் அதிரடியாக நிறுத்தி உள்ளது. சர்வதேச அளவில் புகழ் பெற்ற பல்கலைக்கழமான ஹார்வர்டு பல்கலைக்கழகத்திற்கான நிதியை டிரம்ப் நிர்வாகம் நிறுத்தியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டு மாணவர்களும் நூற்றுக்கணக்கானோர் பயின்று வருகிறார்கள்.




காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
