கழிவறை டிஷ்யூ பேப்பரில் ராஜினாமா கடிதம்.. நிறுவனத்திற்கு ஷாக் கொடுத்த ஊழியர்

சிங்கப்பூர், கழிவறை டிஸ்யூ பேப்பரில் தனது ராஜினாமா கடிதத்தைக் கொடுத்து நிறுவனத்தை ஊழியர் ஒருவர் அதிர்ச்சியில் ஆழ்த்தினார். இதுதொடர்பான அந்த டிஸ்யூ பேப்பரில், "இந்த நிறுவனம் என்னை எப்படி நடத்தியது என்பதை சுட்டிக்காட்ட இப்படியொரு காகிதத்தில் ராஜினாமாவை எழுதுகிறேன் என்று கழிவறை டிஷ்யூ பேப்பரில் அந்த ஊழியர் எழுதி கொடுத்துள்ளார். முன்னதாக இதனை LinkedIn-ல் பகிர்ந்த பெண் தொழிலபதிபர் ஆஞ்சிலா யோஹ், "அந்தக் குறிப்பு வெறும் வலியை ஏற்படுத்தவில்லை, பணியிட கலாச்சாரம் எவ்வளவு முக்கியமானது என்பதை ஒரு நீடித்த நினைவூட்டலாக விட்டுச் சென்றது. நிறுவனங்கள் ஊழியர்களை மரியாதையாக நடத்த வேண்டும். ஊழியரை சின்ன விஷயங்களுக்கு பாராட்டுவதால்கூட, வேலையில் பல மாற்றங்கள் நடக்கும். அவர்கள் நிறுவனத்தை விட்டு வெளியேற முடிவு செய்தாலும், மனக்கசப்புடன் அல்ல, நன்றியுணர்வுடன் வெளியேறுவார்கள். பாராட்டு என்பது தக்கவைப்புக்கான ஒரு கருவி மட்டுமல்ல. ஒரு நபர் எவ்வளவு மதிக்கப்படுகிறார் என்பதற்கான பிரதிபலிப்பாகும், அவர்கள் செய்யும் செயல்களுக்காக மட்டுமல்ல, அவர்கள் யார் என்பதற்காகவும். மக்கள் குறைத்து மதிப்பிடப்பட்டதாக உணர்ந்தால், சிந்திக்க வேண்டிய நேரம் இது. பாராட்டுதலில் ஏற்படும் சிறிய மாற்றங்கள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இன்றே தொடங்குங்கள்" என்று அறிவுரை வழங்கி உள்ளார்.
மூலக்கதை
