'தொட்டு தொட்டு பேசும் சுல்தானா..' -நடிகை பிரியா வாரியர் நெகிழ்ச்சி
சென்னை,ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் கடந்த 10-ந் தேதி வெளியான படம் 'குட் பேட் அக்லி'. இதில் திரிஷா, அர்ஜுன் தாஸ், சுனில் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பல எதிர்ப்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த படத்தில் மலையாள நடிகையான பிரியா வாரியர் அர்ஜுன் தாஸின் காதலியாக நடித்தார். ஆனால் இதில் பிரியா வாரியருக்கு பெரிய கதாபாத்திரம் இல்லை என்றாலும், அர்ஜுன் தாஸூடன் 'தொட்டு தொட்டு பேசும் சுல்தானா' பாடலுக்கு அவர் நடனம் ஆடியது ரசிகர்கள் மட்டுமல்லாது, சமூக வலைதளங்களிலும் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில், ஐதராபாத்தில் நடந்த 'குட் பேட் அக்லி' படத்தின் வெற்றிக் கொண்டாட்டத்தில் நடிகை பிரியா கலந்து கொண்டு பேசினார். அதில், 'எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது, என்ன சொல்வது என்று தெரியவில்லை. இதனை நான் உண்மையில் எதிர்பார்க்கவில்லை. என்னுடைய போனுக்கு தொடர்ந்து வாழ்த்து மடல்கள் வந்து கொண்டே இருக்கின்றன. அதாவது, 2018-ம் ஆண்டு வெளியான 'அடார் லவ்' படத்தில் நான் வைரலானது போல, மீண்டும் வைரல் ஆகிவிட்டேன் என்று என்னிடம் சொல்கிறார்கள். அதுவும் சிம்ரன் மேம் ஆடிய 'தொட்டு தொட்டு பேசும் சுல்தானா' பாடலுக்கு, நான் சரியான பங்களிப்பை கொடுப்பேன் என்று நம்பிய இயக்குனர் ஆதிக் சாருக்கு நன்றி. நான் அஜித் சாரின் தீவிர ரசிகராக மாறிவிட்டேன். அவ்வளவு உறுதுணையாக இருந்தார். அவரிடமிருந்து கற்றுக்கொள்ள பல விஷயங்கள் இருக்கின்றன' என்று பேசினார்.




பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
கோவா தீ விபத்து சம்பவம்; விரிவான விசாரணை தேவை - ராகுல் காந்தி வலியுறுத்தல்
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
’ஓபன் செய்த உடன் ரீல்ஸ்’ இன்ஸ்டாகிராமில் வரும் சூப்பர் அப்டேட்
எடப்பாடி பழனிசாமியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு
டிட்வா புயல்: 4 துறைமுகங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடிப்பு
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
காவிரி பாசன மாவட்டங்களில் உரத்தட்டுப்பாடு; நடவடிக்கை எடுக்க அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
