இந்திய பங்குச்சந்தைகள் இன்று ஏற்றம்: முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி
மும்பை,அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் 75க்கும் மேற்பட்ட நாடுகள் மீது பரஸ்பர விரிவிதிப்பை அமல்படுத்துவதாக கடந்த 2 ஆம் தேதி அறிவித்தார். டிரம்ப் அறிவித்த மறுநாளில் ஆசிய, ஐரோப்பிய பங்குச்சந்தைகளில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டது. இதற்கிடையே, பரஸ்பர வரி விதிப்பை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக டிரம்ப் அறிவித்தார். டிரம்பின் இந்த அறிவிப்புக்கு பிறகு பங்குச்சந்தைகள் ஏற்றம் காணத்தொடங்கியுள்ளன. அந்த வகையில் பங்குச்சந்தையில் இன்றும் ஏற்றம் ஏற்பட்டது. இன்று காலை வர்த்தக தொடக்கத்தின் போது சென்செக்ஸ் 1061.26 புள்ளிகள் உயர்ந்து, 74,941.53 ஆக இருந்தது. அதேபோல், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 354.90 புள்ளிகள் உயர்ந்து 22,754.05 ஆக இருந்தது. சர்வதேச சந்தைகளில் பதற்றம் சற்றே தணிந்துள்ள நிலையில், இந்திய பங்குச்சந்தைகளின் ஏற்றம் ஏற்பட்டு இருப்பது முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை அளித்துள்ளது. அதேநேரத்தில், மற்ற ஆசியப் பங்குச்சந்தைகள் சரிவில் உள்ளது குறிப்பிடத்தக்கது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
