அரசுமுறை பயணம்: போர்ச்சுக்கல் சென்றடைந்தார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
புதுடெல்லி, ஜனாதிபதி திரவுபதி முர்மு 4 நாட்கள் அரசுமுறை பயணமாக ஐரோப்பாவுக்கு சென்ற நிலையில், தனி விமானம் மூலமாக முதலில் போர்ச்சுக்கல் நாட்டுக்கு சென்றடைந்துள்ளார். பிகோ மதுரோவின் இராணுவ விமான நிலையத்தில் ஜனாதிபதியை போர்ச்சுகலில் உள்ள இந்திய தூதர் புனீத் ஆர் குண்டல் மற்றும் இந்தியாவில் உள்ள போர்ச்சுகல் தூதர் ஜோவா ரிபேரோ டி அல்மீடியா ஆகியோர் வரவேற்றனர்.இந்திய ஜனாதிபதி ஒருவர் போர்ச்சுக்கலுக்கு செல்வது 27 ஆண்டுகளில் இது முதன்முறையாகும். தலைநகர் லிஸ்பனில் அந்த நாட்டின் அதிபர் மார்செலோ ரெபெலோ டி சவுசா, பிரதமர் லூயிஸ் மாண்டினீக்ரோ முதலிய உயர்மட்டத் தலைவர்களுடன் ஜனாதிபதி முர்மு பேச்சுவார்த்தையில் ஈடுபடுகிறார்.தனது 2 நாட்கள் பயணத்தை அங்கு முடித்து கொண்டு அடுத்தப்படியாக சுலோவாகியாவுக்கு செல்கிறார். அங்குஅவர் சுலோவாகியா அதிபர் பீட்டர் பெல்லெக்ரினி, பிரதமர் ராபர்ட் பிகோ மற்றும் நாடாளுமன்ற சபாநாயகர் ரிச்சர்ட் ராசி ஆகியோரை சந்திக்க உள்ளார். இந்த பயணங்களின்போது இந்தியா-போர்ச்சுகல் மற்றும் சுலோவாகியா இடையே மூலோபாயம், வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன.




காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
