ஐ.பி.எல். தொடரில் விளையாட ஹாரி புரூக்கிற்கு 2 ஆண்டுகள் தடை விதித்த பி.சி.சி.ஐ... காரணம் என்ன..?
மும்பை, இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடரான ஐ.பி.எல்.-ன் 18-வது சீசன் இந்த வருடம் நடைபெற உள்ளது. 10 அணிகள் பங்கேற்கும் இந்த தொடர் வருகிற 22ம் தேதி தொடங்குகிறது. கொல்கத்தாவில் நடைபெறும் முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை எதிர்கொள்கிறது. இந்த தொடரில் டெல்லி தனது தொடக்க லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம் விசாகப்பட்டினத்தில் வரும் 24ம் தேதி நடக்கிறது. இந்த தொடருக்காக கடந்த நவம்பர் மாதம் நடந்த மெகா ஏலத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி ரூ.6¼ கோடிக்கு இங்கிலாந்து வீரர் ஹாரி புரூக்கை வாங்கியது.இதனிடையே அவர் திடீரென இந்த சீசனுக்கான ஐ.பி.எல். போட்டியில் இருந்து கடைசி நேரத்தில் விலகினார். சர்வதேச கிரிக்கெட்டுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் இந்த முடிவை எடுத்ததாக அவர் விளக்கமளித்தார். இந்நிலையில் ஐ.பி.எல். தொடரில் விளையாட அவருக்கு பி.சி.சி.ஐ. 2 ஆண்டுகள் தடை விதித்துள்ளது. அதற்கான காரணம் என்னவெனில், ஐ.பி.எல். புதிய விதிப்படி ஒரு வீரர் அத்தியாவசிய காரணமின்றி விலகினால் 2 ஆண்டு தடை விதிக்கப்படும் என்ற ஐ.பி.எல். நிர்வாகம் அறிவித்திருந்தது. இதனால் அவருக்கு ஐ.பி.எல்.-ல் விளையாட 2 ஆண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
தேசிய இளையோர் திருவிழா நிறைவு நாள் நிகழ்ச்சி: தமிழக மாணவியுடன் உரையாடிய பிரதமர் மோடி
புதுச்சேரியில் பொங்கல் பரிசாக ரூ.3 ஆயிரம் வழங்கப்படும் என அறிவிப்பு
கரூர் துயரம் தொடர்பாக விஜய்யிடம் சிபிஐ முன்வைக்க உள்ள முக்கிய கேள்விகள் என்னென்ன.?
மாடு மேய்த்துக் கொண்டிருந்த பெண்ணை தாக்கி 2 பவுன் செயின் பறிப்பு
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3¾ கோடி
20-ந்தேதி திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் - துரைமுருகன் அறிவிப்பு
கல்லூரி மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்குவது ஏன்.? - உதயநிதி ஸ்டாலின் விளக்கம்
பொங்கல் எதிரொலி... எழும்பூர், தாம்பரம் ரெயில் நிலையங்களில் அலைமோதும் மக்கள் கூட்டம்
பொங்கல் எதிரொலி... கோயம்பேடு சந்தையில் கரும்பு, மஞ்சள் விற்பனை அமோகம்
உரிய நேரத்தில் கூட்டணி குறித்து தெரிவிக்கப்படும் - அமமுக அறிவிப்பு
