ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன்: முதல் சுற்றில் பி.வி.சிந்து அதிர்ச்சி தோல்வி

பர்மிங்காம்,ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி பர்மிங்காமில் நகரில் நடந்து வருகிறது. இதில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து முதலாவது சுற்றில் தென் கொரியாவின் கிம் கா உடன் மோதினார். இந்த ஆட்டத்தில் முதல் செட்டை கைப்பற்றிய பி.வி.சிந்து அடுத்த 2 செட்டுகளை இழந்து அதிர்ச்சி தோல்வியை தழுவினார். இந்த ஆட்டத்தில் சிந்து 21-19, 13-21 மற்றும் 13-21 என்ற செட் கணக்கில் வீழ்ந்தார்.
மூலக்கதை
