விஜய் ஆண்டனியின் 'சக்தித் திருமகன்' டீசர் வெளியானது
சென்னை,தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய் ஆண்டனி. இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான 'ஹிட்லர், ரோமியோ, மழைபிடிக்காத மனிதன்' ஆகிய படங்கள் எதிர்பார்த்த அளவில் வரவேற்பை பெறவில்லை. அதனை தொடர்ந்து இவர் தற்போது தனது 25-வது படமான 'சக்தித் திருமகன்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை விஜய் ஆண்டனி தயாரிக்க அருண் பிரபு எழுதி இயக்குகிறார். இப்படத்திற்கு தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் 'பராஷக்தி' என பெயர் வைக்கப்பட்டுள்ளது.இந்த படத்தின் நடிகை திருப்தி கதாநாயகியாக நடிக்கிறார். இவர் ஏற்கனவே இயக்குனர் அருண் பிரபு இயக்கத்தில் வெளியான 'அருவி, வாழ்' ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அரசியல் கதைக்களத்துடன் உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. இப்படத்தின் வெளியீட்டு இன்னும் அறிவிக்கப்படவில்லை. விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே விஜய் ஆண்டனியின் 22வது படமான 'ககன மார்கன்' விரைவில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.️ TESAER OUT NOW ️#ShakthiThirumagan - https://t.co/LXOPM2BUPM#Bhadrakaali - https://t.co/WkjjwmU3NM#VA25⛓️@ArunPrabu_ @TruptiRavi58094 #SunilKirpalani @vijayantonyfilm pic.twitter.com/rF5sVXRPfP




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
