தெலுங்கில் மீண்டும் கம்பேக் கொடுக்கும் சமந்தா
சென்னை,கடந்த 2010ம் ஆண்டு திரைக்கு வந்த 'விண்ணைதாண்டி வருவாயா' படம் மூலமாக சினிமாவில் அறிமுகமானவர் சமந்தா. 'பானா காத்தாடி' படத்தின் ஹீரோயினாக எண்ட்ரி கொடுத்தார். அதனையடுத்து அவர் நடித்த படங்கள் அனைத்துமே வெற்றி படங்களாக அமைந்தன.இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் முன்னணி நடிகையாக வலம் வருபவர். தெலுங்கு மொழியில் இவரது நடிப்பில் வெளியான சாகுந்தலம் மற்றும் குஷி ஆகிய 2 படங்களுமெ போதுமான ரீச் கொடுக்கவில்லை. இந்த நிலையில் சமந்தா இயக்குனர் பிவி நந்தினி ரெட்டி இயக்கத்தில் மீண்டும் தெலுங்கு படத்தில் நடிக்க உள்ளார். இவரது இயக்கத்தில் சமந்தா நடிப்பில் வெளியான 'ஜபர்தஸ்த், ஓ பேபி' ஆகிய படங்களை வெற்றி படங்களாக அமைந்தது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் பெங்களூருவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட திருவிழாவில் கலந்து கொண்ட நந்தினி ரெட்டி, 'சினிமாவில் பெண்கள்' என்கிற தலைப்பில் பேசும்போது மீண்டும் சமந்தாவுடன் இணைந்து அடுத்த படம் செய்கிறேன் என கூறியுள்ளார்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
