நாடு முழுவதும் 5,400 பேராசிரியர் பணியிடங்கள் காலி
புதுடெல்லி,மத்திய பல்கலைக்கழகங்களில் 5,400க்கும் மேற்பட்ட பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும், அவற்றில் பாதிக்கும் மேற்பட்டவை ஓபிசி, எஸ்டி மற்றும் எஸ்சி பிரிவுகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் மாநிலங்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.மாநிலங்களவையில் இது தொடர்பான கேள்விக்கு மத்திய கல்வித்துறை இணை மந்திரி சுகந்தா மஜும்தார் கூறும்போது,' நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்களில் 2025 ஜனவரி 31ம் தேதி கணக்குப்படி, 5,400 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. அவற்றில் பாதிக்கும் மேற்பட்டவை ஓபிசி, எஸ்டி மற்றும் எஸ்சி பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டவை. இதில் எஸ்சிக்கு 788, எஸ்டிக்கு 472, ஓபிசிக்கு 1,521. இந்த பல்கலைக்கழகங்களில் 7,825க்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் சிறப்பு ஆட்சேர்ப்பு இயக்கங்கள் மூலம் நிரப்பப்பட்டுள்ளன.காலியிடங்கள் ஏற்படுவதும் அவற்றை நிரப்புவதும் தொடர்ச்சியான செயல்முறையாகும். மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால் ஓய்வு, ராஜினாமா மற்றும் கூடுதல் தேவைகள் காரணமாக காலியிடங்கள் குறித்து கேள்வி எழுகின்றன, மேலும் பதவிகளை நிரப்பும் பொறுப்பு மத்திய பல்கலைக்கழகத்திடம் உள்ளது என்றார்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
