ஹோலி பண்டிகை பேரணி: 10 மசூதிகளை தார்பாய் போட்டு மூட உத்தர பிரதேச அரசு முடிவு
லக்னோ, வட இந்தியாவில் ஹோலி பண்டிகை வரும் 14-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த பண்டிகை வரும் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட உள்ள நிலையில், அன்றைய தினம் இஸ்லாமியர்கள் ஜும்ஆ தொழுகையை மேற்கொள்வார்கள். சுமார் 60 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஹோலி பண்டிகையும், ஜும்ஆ தொழுகை தினமும் ஒரே நாளில் வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், உத்தர பிரதேச் மாநிலம் சம்பல் மாவட்டத்தில் ஹோலி பண்டிகையை முன்னிட்டு 'சவுபாய்' என்ற பேரணி நடைபெற உள்ளது. இந்த பேரணிக்கான பாதையில் சுமார் 10 பள்ளிவாசல்கள் உள்ளன. அந்த 10 பள்ளிவாசல்களையும் திரையிட்டு மூடுவதற்கு உத்தர பிரதேச அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக சம்பல் காவல்துறை எஸ்.பி. சிரீஷ் சந்திரா கூறுகையில், "சமூக நல்லிணக்கத்தை பேணுவதற்கும், இரு சமூகத்தினரும் தங்கள் பண்டிகைகளை முழு மகிழ்ச்சியுடனும், உற்சாகத்துடனும் கொண்டாடுவதற்கு வசதியாகவும் இந்த முடிவு எடுக்கப்பட்டது" என்று தெரிவித்துள்ளார். அதோடு, இந்த நடைமுறை பல ஆண்டுகளாக இருந்து வருகிறது என்று அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
