உத்தரபிரதேசம்: டிராக்டர் மோதி ஐந்து வயது சிறுமி பலி

லக்னோ,உத்தரபிரதேசம் அமேதி நகர் பகுதியை சேர்ந்த பவானி என்கிற சிறுமு தனது வீட்டிற்கு வெளியே விளையாடிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வேகமாக வந்த டிராக்டர் ஒன்று சிறுமி மீது மோதியது.இந்த விபத்தில் சிறுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்தை ஏற்படுத்திய டிராக்டர் டிரைவர் சில நொடிகளில் அங்கிருந்து தப்பி சென்றார். பின்னர் இது குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்த சிறுமியின் உடலை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தன.இது குறித்து வழக்குப்பதிவு செய்த அமேதி போலீசார் விபத்தை ஏற்படுத்திய டிராக்டர் டிரைவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
மூலக்கதை
