2வது முறையாக தங்கம் விலையில் மாற்றம்: தற்போதைய விலை நிலவரம் என்ன..?
சென்னை,சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வருகிறது. இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே தங்கத்தின் விலை யாரும் எதிர்பார்க்காத வகையில் உயர்ந்தவாறு இருக்கிறது. கடந்த மாதம் (பிப்ரவரி) 11-ந் தேதி தங்கம் விலை முதன் முறையாக பவுனுக்கு ரூ.64 ஆயிரத்தை தாண்டி புதிய உச்சத்தை எட்டியது.இதற்கிடையே கடந்த மாதம் 28-ந்தேதி தங்கம் விலை ரூ.64 ஆயிரத்துக்கு கீழ் குறைந்தது. அன்றைய தினம் பவுனுக்கு ரூ.400 குறைந்து ரூ.63 ஆயிரத்து 680 ஆக இருந்தது. பின்னர், மார்ச் 1-ந்தேதி கிராமுக்கு ரூ.20-ம், பவுனுக்கு ரூ.160-ம் குறைந்து ரூ.63 ஆயிரத்து 520-க்கு விற்பனையானது. அதன்பிறகு தொடர்ந்து மூன்று நாட்களாக தங்கம் விலை சரிந்த நிலையில், நேற்று முன் தினம் விலை உயர்ந்து மீண்டும் 64 ஆயிரத்தை தாண்டியது. நேற்று கிராமுக்கு ரூ. 55 உயர்ந்து 8,065 ரூபாயாக விற்பனையானது. ஒரு பவுன் ரூ. 440 உயர்ந்து 64,520 ரூபாயாக விற்பனையானது. தங்கம் விலை மீண்டும் ஏறத்தொடங்கி அதிர்ச்சி கொடுத்த நிலையில், இன்று காலை சற்று ஆறுதல் அளிக்கும் விதமாக தங்கம் விலை குறைந்தது. இதன்படி சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 45 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.8 ஆயிரத்து 20-க்கும், சவரனுக்கு 360 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.64ஆயிரத்து160க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்த நிலையில், மூன்று மணிநேரத்தில் சவரனுக்கு ரூ.320 உயர்ந்துள்ளது. இதன்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.64,480க்கும், ஒரு கிராமுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.8,060க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
