"ஒத்த ஓட்டு முத்தையா" குடும்பத்தோடு பார்க்க வேண்டிய படம் - கவுண்டமணி
சென்னை,'ஒத்த ஓட்டு முத்தையா' படத்தில் கவுண்டமணியுடன் யோகி பாபு, சித்ரா லட்சுமணன், சிங்கமுத்து மற்றும் மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்டவர்கள் நடித்திருகின்றனர். இப்படத்தின் இயக்குநர் சாய் ராஜகோபால் சுமார் 70 படங்களில் கவுண்டமணி மற்றும் செந்திலுக்கான நகைச்சுவை பகுதியை எழுதியதோடு, பல்வேறு படங்களில் உதவி, துணை மற்றும் இணை இயக்குநராக பணியாற்றியுள்ளார். அரசியல் நகைச்சுவை கலந்து உருவாகியுள்ள இந்தத் திரைப்படத்தை இயக்குநர் சாய் ராஜகோபால் இயக்கியுள்ளார். சினி கிராப்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் ரவிராஜா இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார். சித்தார்த் விபின் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பாக்யராஜ், பி.வாசு, சினேகன் போன்றோர் கலந்துகொண்டு 'ஒத்த ஓட்டு முத்தையா' படத்தைப் பற்றி பேசினார்கள்.அதன் பிறகு நிகழ்ச்சியில் பேசிய கவுண்டமணி, "என்ன பேசுறதுன்னு தெரியல. எனக்கு முன்னாடி பேச வந்த பிரபலங்கள் எல்லோரும் 'ஒத்த ஓட்டு முத்தையா' படத்தை பத்தி பேசிட்டு போயிட்டாங்க. குடும்பத்தோடு வந்து பார்க்கவேண்டிய படம் இது. எல்லோரும் வந்து பாருங்கள். இந்த ஒத்த ஓட்டு முத்தையாவை வெற்றி ஓட்டு முத்தையவாக மாற்றுங்கள். விழாவிற்கு வந்திருக்கும் ரசிகர்கள், வராத ரசிகர்கள் என எல்லோருக்கும் நன்றி " என்று கூறி இயக்குநர், தயாரிப்பாளர், ஒளிப்பதிவாளர் எல்லோருக்கும் தனது நன்றியைத் தெரிவித்திருக்கிறார்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
ஆபாச வீடியோ, புகைப்படம்... மடாதிபதியிடம் ரூ.1 கோடி கேட்டு மிரட்டிய இளம்பெண் கைது
திருவனந்தபுரம் - தாம்பரம் அம்ரித் பாரத் ரெயில் சேவை: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
திருப்பதியில் ஒரு நாள் உண்டியல் காணிக்கை ரூ.4½ கோடி
டெல்லி சிபிஐ அலுவலகத்தில் விஜய் ஆஜர்: இன்று மாலைக்குள் விசாரணையை முடிக்க திட்டம்?
கரூர் சம்பவம்: சிபிஐ முன்பு 2-வது முறையாக இன்று ஆஜராகிறார் விஜய்
பாஜக கூட்டணிக்கு தமிழ்நாடு எப்போதுமே தோல்வியைத்தான் தரும் - பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் பதிலடி
நாளை ம.நீ.ம. செயற்குழு கூட்டம் - கமல்ஹாசன் அறிவிப்பு
திருப்பூர் வழியாக இன்று முதல் அம்ரித் பாரத் ரெயில் சேவை
மூதாட்டி முகத்தில் மிளகாய் பொடி தூவி 2 பவுன் செயின் பறிப்பு
16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்சோவில் 3 பேர் கைது
