டெல்லி குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க 10 ஆயிரம் பேருக்கு அழைப்பு
புதுடெல்லி, தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகளில் மக்களின் பங்கேற்பை அதிகரிப்பதை மத்திய அரசு நோக்கமாக கொண்டு உள்ளது. இதன் அடிப்படையில் பல்வேறு முக்கிய விழாக்களுக்கு சாமானிய மக்களும் சிறப்பு விருந்தினராக அழைக்கப்படுகிறார்கள். இதன்படி டெல்லி கடமைப்பாதையில் வருகிற 26-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் குடியரசு தின விழாவில் பங்கேற்பதற்கும் பொதுமக்களில் பல தரப்பினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. இந்த வகையில் 10 ஆயிரம் பேர் அழைப்பை பெறுகிறார்கள்.கிராமத்தை கவனிக்கும் முக்கிய நபர்கள், பேரிடர் நிவாரண பணியாளர்கள், சிறந்த கிராமங்களின் முக்கியஸ்தர்கள், வனம் மற்றும் வனவிலங்கு பாதுகாவலர்கள், கைவினைஞர்கள், கைத்தறி கைவினைஞர்கள், பல்வேறு திட்டங்களின் சாதனையாளர்கள், அங்கீகாரம் பெற்ற சமூகநல ஆர்வலர்கள், 'மன்கி பாத்' பங்கேற்பாளர்கள், பாரா ஒலிம்பிக் வீரர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் உள்பட 31 பிரிவுகளில் பொதுமக்கள் அழைக்கப்பட்டு வருகிறார்கள். இவர்கள் குடியரசு தின விழாவில் பங்கேற்பது மட்டும் அல்லாமல் தேசிய போர் நினைவிடம், பிரதமர் சங்கராலயா போன்ற இடங்களுக்கும் அழைத்துச் செல்லப்பட உள்ளனர். குடியரசு தின விழாவில் ஒவ்வொரு ஆண்டும் பிற நாடுகளின் தலைவர்களும் முக்கிய விருந்தினராக பங்கேற்பார்கள். அந்த வகையில் இந்த ஆண்டு இந்தோனேஷிய அதிபர் பிரபோவோ சுபியாண்டோ பங்கேற்பது குறிப்பிடத்தக்கது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
