பிரிட்டனில் இடம்பெறும் உலகக் கிண்ண சர்வதேச தமிழர் பூப்பந்தாட்ட சுற்றுப் போட்டியில் பங்கேற்கும் கனேடியத் தமிழ் வீரர்கள்

தமிழ்நியூஸ்நெற்  தமிழ்நியூஸ்நெற்
பிரிட்டனில் இடம்பெறும் உலகக் கிண்ண சர்வதேச தமிழர் பூப்பந்தாட்ட சுற்றுப் போட்டியில் பங்கேற்கும் கனேடியத் தமிழ் வீரர்கள்

எதிர்வரும் ஏப்பிரல் மாதம் 4 ஆம், 5 ஆம் திகதிகளில் பிரித்தானியாவில் நடைபெறவிருக்கும், உலகக் கிண்ண சர்வதேச தமிழர் பூப்பந்தாட்ட சுற்றுப் போட்டியில் ,இலங்கை இந்தியா உட்பட 35 க்கு மேட்பட்ட நாட்டு வீரர்கள் கலந்து கொள்ள உள்ள நிலையில், கனடா நாடு சார்பாக 11 போட்டியாளர்கள், இந்த உலக கிண்ண போட்டியில் கலந்து கொள்ளவுள்ளனர்.

உலகத்தமிழர் பூப்பந்தாட்ட பேரவையினால் நடாத்தப்படும் 3 வது உலககிண்ண போட்டி எதிர்வரும் ஏப்பிரல் மாதம் 4 ஆம், 5 ஆம் திகதிகளில் பிரித்தானியாவில் உள்ள “The National Badminton Centre” Bradwell Road, Loughton, Milton Keynes, MK8 9 என்னும் பிரமாண்ட அரங்கில் நடைபெறவுள்ள நிலையில், கனடா ரொறான்ரோ பெரும் பாகத்தில் தமிழர்களால் நிர்வகிக்கப்பட்டு வரும் பூபந்தாட்ட பயிற்சி கூடத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட 11 போட்டியாளர்கள், இந்த உலகக் கிண்ண போட்டியில் கலந்து கொள்ளவுள்ளனர்.

பல வயதுப்பிரிவையும் சேர்ந்த ஆண்கள், பெண்கள் இரு பாலாரும் Singles, Doubles Open Doubles என்ற நிலைகளில் போட்டியிடவுள்ளனர்.

பல நாடுகளில் இருந்து திறமைமிக்க வீரர்கள் கலந்து கொள்ளும் இந்த சர்வதேச போட்டி மிகவும் கடினமானதாக இருக்குமெனவும், மதி நுட்பத்துடனும் ,தள சந்தர்ப்பத்தை பயன்படுத்தி விளையாடினாலே வெற்றி கொள்ளமுடியுமென போட்டியில் கலந்து கொள்ளும் வீரர்கள் கருத்து தெரிவித்தனர்.

கனடா நாட்டை பிரதிநிதித்துவப்படுத்தி தமிழர்கள் சார்பில் கலந்து கொள்ளும் இந்த வீரர்கள் வெற்றி வாகை வர வாழ்த்துகிறோம்.

மூலக்கதை