வங்காளதேசத்தில் 'இஸ்கான்' அமைப்பை தடை செய்ய கோர்ட்டு மறுப்பு
டாக்கா,வங்காளதேசத்தின் தேசிய கொடியை அவமதித்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், அந்நாட்டைச் சேர்ந்த இந்து மத அமைப்பின் தலைவர் சின்மய் கிருஷ்ண தாஸ் அண்மையில் கைது செய்யப்பட்டார். அவர் மீதான கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, வங்காளதேசத்தில் உள்ள இந்து அமைப்பைச் சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தினர். இந்த நிலையில், வங்காளதேசத்தில் 'இஸ்கான்' (ISKCON) அமைப்பின் செயல்பாடுகளுக்கு அரசு தடை விதிக்க வேண்டும் எனவும், அங்குள்ள சத்தோகிரம், ராங்பூர் மற்றும் தினஜ்பூர் ஆகிய பகுதிகளில் 144 தடை உத்தரவை அமல்படுத்த வேண்டும் என்றும் கோரி டாக்கா ஐகோர்ட்டில் வழக்கறிஞர் மொனிருதீன் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி பராஹ் மஹ்பூப், நீதிபதி டெபாசிஷ் ராய் சவுத்ரி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், வங்காளதேசத்தில் 'இஸ்கான்' அமைப்பிற்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்தனர். அதே சமயம், வங்காளதேசத்தில் சட்ட ஒழுங்கை பாதுகாப்பதில் அரசு கவனமாக இருக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.




காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
