ஏற்றத்துடன் நிறைவடைந்தது இந்திய பங்குச்சந்தை
மும்பை,மும்பை பங்குச்சந்தையில் இன்றும் முதலீட்டாளர்களுக்கு சாதகமாகவே வர்த்தகம் நடைபெற்றது. கடந்த வெள்ளிக்கிழமை பிஎஸ்இ பெஞ்ச்மார்க் 1,961.32 புள்ளிகள் உயர்ந்து 79,117 ஆக இருந்தது. நிப்டி 557 புள்ளிகள் உயர்ந்து 23,907ஆக இருந்தது. அதன் தொடர்ச்சியாக இன்றும் ஏற்றத்துடன் பங்குவர்த்தகம் தொடங்கியது. பிஎஸ்இ சென்செக்ஸ் இன்றைய வர்த்தகம் முடிவில் 992.74 புள்ளிகள் முன்னேறி 80,109.85 இல் நிறைவடைந்தது. தேசிய பங்குச் சந்தை (என்எஸ்இ) 314.65 புள்ளிகள் அதிகரித்து 24,221.90 ஆக இருந்தது.இன்றைய வர்த்தகத்தின் போது லார்சன் , பாரத ஸ்டேட் வங்கி, அதானி போர்ட்ஸ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், பவர் கிரிட், ஐசிஐசிஐ வங்கி, ஹெச்டிஎப்சி வங்கி, டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், கோடக் மஹிந்திரா வங்கி, ஆக்சிஸ் வங்கி ஆகியவை அதிக லாபம் ஈட்டின. அதேநேரம் ஜேஎஸ்டபிள்யு ஸ்டீல், டெக் மஹிந்திரா, இன்போசிஸ், மாருதி, ஏசியன் பெயிண்ட்ஸ் ஆகியவை பின்தங்கின. மராட்டிய சட்டசபை தேர்தலில் ஆளும்கூட்டணிக்கு கிடைத்த வெற்றியும் பங்குவர்த்தக உயர்வுக்கு ஒரு காரணம் என்று ஜியோஜித் பைனான்சியல் சர்வீசஸ் தலைமை முதலீட்டு நிபுணர் வி.கே.விஜயகுமார் கூறியுள்ளார்.ஆசிய சந்தைகளில், சியோல் மற்றும் டோக்கியோ உயர்வுடன் நிலைபெற்றன.கடந்த வெள்ளிக்கிழமையன்று அமெரிக்க சந்தைகள் சாதகமான நிலையில் முடிவடைந்தது குறிப்பிடத்தக்கது.




பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
கோவா தீ விபத்து சம்பவம்; விரிவான விசாரணை தேவை - ராகுல் காந்தி வலியுறுத்தல்
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
’ஓபன் செய்த உடன் ரீல்ஸ்’ இன்ஸ்டாகிராமில் வரும் சூப்பர் அப்டேட்
எடப்பாடி பழனிசாமியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு
டிட்வா புயல்: 4 துறைமுகங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடிப்பு
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
காவிரி பாசன மாவட்டங்களில் உரத்தட்டுப்பாடு; நடவடிக்கை எடுக்க அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
