இலங்கையில் மீண்டும் ஓர் தேர்தல் - தீர்மானத்தை வெளியிட்ட அரசாங்கம் - லங்காசிறி நியூஸ்
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடத்தத் தீர்மானித்துள்ளதாக வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.கண்டியில் இன்று (23) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். “உச்சநீதிமன்றம் உள்ளாட்சித் தேர்தலை விரைவில் நடத்துவதற்கான தீர்ப்பை வழங்கியுள்ளது. எனினும், இந்த ஆண்டு இந்தத் தேர்தலை நடத்துவதற்குத் தேவையான ஏற்பாடுகள் ஒதுக்கப்படவில்லை” என்றார்.“எனவே, அடுத்த ஆண்டு தொடக்கத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடைபெறும். பிரதேச சபைகள் மற்றும் நகர சபைகளுக்கான தேர்தலை நடத்துவதற்கு நாங்கள் தயாராக உள்ளோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.இரண்டு வருடங்களுக்கு முன்னர் வழங்கப்பட்ட உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான வேட்பு மனுக்களில் சில வேட்பாளர்கள் உயிரிழந்துள்ளதுடன், சிலர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாகவும் இவர் தெரிவித்துள்ளார்.மேலும் புதிதாக வேட்புமனுக்களை கோருவதா, இல்லையா என்பது தொடர்பில் ஏனைய கட்சிகளுடன் கலந்தாலோசித்த பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
