சிட்டி ஏமாற்றம்; லிவர்பூல் குதூகலம்
பிரைட்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்தாட்டத்தில் மான்செஸ்டர் சிட்டி தொடர்ச்சியாக அதன் நான்காவது தோல்வியைச் சந்தித்துள்ளது.இத்தகைய ஒரு நிலை அதன் நிர்வாகி பெப் கார்டியோலாவுக்கு நேர்ந்திருப்பது இதுவே முதல்முறை.நவம்பர் 9ஆம் தேதியன்று நடைபெற்ற ஆட்டத்தில் பிரைட்டன் குழுவிடம் அது 2-1 எனும் கோல் கணக்கில் தோற்றது.ஆட்டத்தின் 23வது நிமிடத்தில் சிட்டியின் நட்சத்திர ஆட்டக்காரர் எர்லிங் ஹார்லண்ட் கோல் போட்டு தமது குழுவை முன்னிலைக்குக் கொண்டு சென்றார்.ஆனால் ஆட்டத்தின் கடைசி 15 நிமிடங்களில் பிரைட்டன் இரண்டு கோல்கள் போட்டு ஆட்டத்தைக் கைப்பற்றியது.இந்த வெற்றியின் மூலம் பிரைட்டன் 19 புள்ளிகளுடன் லீக் பட்டியலில் நான்காவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.சிட்டி, 23 புள்ளிகளுடன் லீக் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது.மற்றோர் ஆட்டத்தில் ஆஸ்டன் வில்லாவை 2-0 எனும் கோல் கணக்கில் லிவர்பூல் வீழ்த்தியது.லிவர்பூலுக்காக டார்வின் நுநேசும் முகம்மது சாலாவும் கோல்கள் போட்டனர்.லீக் பட்டியலில் லிவர்பூல், 28 புள்ளிகளுடன் முன்னிலை வகிக்கிறது.தோல்வி அடைந்த வில்லா 18 புள்ளிகளுடன் லீக் பட்டியலில் எட்டாவது இடத்தில் உள்ளது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
