எரிசக்தி உருமாற்றத்தில் பின்தங்கும் இந்தியா
புதைபடிவமற்ற எரிசக்தி என்னும் எரிசக்தி உருமாற்றம் இந்தியாவில் மெதுவாக நடைபெறுவதாகத் தகவல் வெளியாகி உள்ளது.அதனால் பருவநிலை மாற்றம் தொடர்பான இந்தியாவின் குறிக்கோள்களுக்கு சிக்கல் ஏற்பட்டு இருப்பதாகவும் இந்தியாவில் உள்ள ‘ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்’ செய்தியாளர் தெரிவித்தள்ளார்.கடந்த 2021ஆம் ஆண்டு கிளாஸ்கோவில் நடைபெற்ற பருவநிலை மாற்றத்திற்கான 26வது ஐநா மாநாட்டில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, 2030ஆம் ஆண்டுக்குள் புதைபடிவமற்ற எரிசக்தியின் அளவை ஐந்து மடங்கு அதிகரித்து 500 கிகாவாட்டை எட்ட இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளதாகக் கூறினார்.அவர் அவ்வாறு கூறி மூன்றாண்டுகள் கடந்திருக்கும் வேளையில் அந்த இலக்கை அடைவது என்பது கேள்விக்குறியாகி உள்ளது.இலக்கை அடையத் தேவையான காற்றாலை, சூர்யசக்தி, ஹைட்ரஜன் எரிசக்தி, அணுமின் திட்டங்களில் பாதிக்கும் குறைவானவையே தொடங்கப்பட்டு உள்ளன. அதாவது, 2023 ஏப்ரல் முதல் 2024 மார்ச் வரை 18.48 கிகாவாட் அளவுக்கே புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்டங்கள் தொடங்கப்பட்டு உள்ளன.2030ஆம் ஆண்டின் இலக்கை அடைய இது மிகவும் சொற்பமான அளவு.புதைபடிவமற்ற எரிசக்தி இலக்கை அடைவதற்கான முயற்சிகள் தொய்வடைந்திருப்பதால் பருவநிலை மாற்றத்திற்கான இந்தியாவின் விரிவான குறிக்கோள்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளன. அத்துடன், மாசு ஏற்படுத்தக்கூடிய நிலக்கரி மின்சார உற்பத்திக்கான முதலீடுகள் அதிகரிக்கவும் அது காரணமாக உள்ளது.புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மீதான முதலீடுகளே இந்தியாவின் தற்போதைய தேவை.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
