லெபனான் பேஜர் தாக்குதல்கள்: அனுமதி தந்ததை ஒப்புக்கொண்ட நெட்டன்யாகு
ஜெருசலம்: கடந்த செப்டம்பர் மாதம், ஹிஸ்புல்லா அமைப்பு பயன்படுத்திய பேஜர் கருவிகளின் மூலம் லெபனானில் நடத்தப்பட்ட தாக்குதல்களுக்குத் தாம் ஒப்புதல் அளித்ததாக இஸ்ரேலியப் பிரதமர் பென்சமின் நெட்டன்யாகு ஞாயிற்றுக்கிழமையன்று (நவம்பர் 10) தெரிவித்தார்.அந்தத் தாக்குதல்களில் தாங்கள் ஈடுபட்டதை இஸ்ரேல் முதன்முறையாக ஒப்புக்கொண்டுள்ளது.அந்தத் தாக்குதல்களுக்குத் தங்களின் பரம எதிரியான இஸ்ரேல்தான் காரணம் என்று ஹிஸ்புல்லா முன்னதாகக் குற்றஞ்சாட்டியது. ஈரான் ஆதரவுடன் இயங்கும் ஹிஸ்புல்லாவுக்கு அந்தத் தாக்குதல்கள் பெரும் பின்னடைவாக அமைந்தது.அதற்குப் பதிலடி தரப்படும் என்றும் ஹிஸ்புல்லா உறுதியளித்தது.“லெபனானின் பேஜர் தாக்குதலை நடத்துவதற்குத் தாம் அனமதி அளித்ததை நெட்டன்யாகு நவம்பர் 10ஆம் தேதியன்று உறுதிப்படுத்தினார்,” என்று திரு நெட்டன்யாகுவின் பேச்சாளர் ஒமர் டொஸ்திரி ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.கடந்த செப்டம்பர் மாத நடுப்பகுதியில் தொடர்ந்து இரு நாள்களாக ஹிஸ்புல்லா அமைப்புகளுடன் செயல்பட்ட உளவாளிகள் அந்த அமைப்பு பயன்படுத்திய கைப்பிடி சாதனங்களை வெடிக்கச் செய்தனர். பேரங்காடிகள், சாலைகள், இறுதிச் சடங்கு நிகழ்வுகளில் கருவிகள் வெடித்தன. அந்தத் தாக்குதல்களில் கிட்டத்தட்ட 40 பேர் கொல்லப்பட்டனர், சுமார் 3,000 பேர் காயமுற்றனர்.




காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
