அமெரிக்காவில் அடைக்கலம் கோரும் இந்தியர் எண்ணிக்கை ஒன்பது மடங்கு அதிகரிப்பு
அகமதாபாத்: அமெரிக்காவில் அடைக்கலம் கேட்டு விண்ணப்பித்துள்ள இந்தியர்களின் எண்ணிக்கை கடந்த மூவாண்டுகளில் கிட்டத்தட்ட ஒன்பது மடங்கு அதிகரித்துள்ளது.அதாவது, 2021ஆம் ஆண்டு 4,330ஆக இருந்த அந்த எண்ணிக்கை 855% கூடி, 2023ஆம் ஆண்டில் 41,330 ஆகிவிட்டது என்று அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறைத் தரவுகள் தெரிவிக்கின்றன.அவர்களில் ஏறக்குறைய பாதிப்பேர் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்று இந்திய அதிகாரிகளைச் சுட்டி, ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ செய்தி வெளியிட்டுள்ளது.எப்படியேனும் அமெரிக்காவில் குடியேறிவிட வேண்டும் என்ற அவர்களின் தீராத ஆவலை வெளிப்படுத்துவதாக இது அமைந்துள்ளது.கடந்த 2023ஆம் ஆண்டில் 5,430 இந்தியர்களின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு, அவர்களுக்கு அடைக்கலம் அளிக்கப்பட்டது என்று இவ்வாண்டு அக்டோபர் மாதம் அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை வெளியிட்ட, அடைக்கலம் பெற்றவர்கள் குறித்த ஆண்டறிக்கை தெரிவிக்கிறது.2021ஆம் ஆண்டு 4,330 இந்தியர்கள் அமெரிக்காவில் அடைக்கலம் அளிக்கக் கோரி, அந்நாட்டின் குடியுரிமை, குடிநுழைவுச் சேவைகள் பிரிவிற்கு விண்ணப்பம் அளித்தனர். அவர்களில் 1,330 பேரின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. அதற்கு மறுஆண்டில் 14,570 பேர் விண்ணப்பம் செய்த நிலையில், 4,260 பேரின் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டு, அடைக்கலம் அளிக்கப்பட்டது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
