சல்மான் கானுக்கு நான்கு அடுக்கு பாதுகாப்பு
குஜராத் சிறையில் இருக்கும் ரவுடியால் சல்மான் கானுக்கு ஆபத்து என்பதால் அவரின் படப்பிடிப்பு, தங்குமிடம் ஆகியவற்றுக்கு நான்கு அடுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.பிரபல பாலிவுட் நாயகன் சல்மான் கானுக்கு, குஜராத் சிறையில் இருக்கும் ரவுடி லாரன்ஸ் பிஷ்னோய் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். அவரது கும்பலைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து சல்மானுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்றனர்.இதற்கிடையே ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் ‘சிக்கந்தர்’ என்ற படத்தில் சல்மான் கான் நடித்து வருகிறார். இதில் ராஷ்மிகா மந்தனா, சத்யராஜ் உட்பட பலர் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து வருகிறது. இங்கு ஒரு மாதத்துக்கு மேல் படப்பிடிப்பு நடக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், அவருக்கு அரசு கொடுத்த பாதுகாப்பையும் தாண்டி, சல்மான் கான் தரப்பில் தனியாக மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அவருக்கு 50லிருந்து 70 பேர் வரை பாதுகாப்பு அளித்து வருவதாகக் கூறப்படுகிறது. அவர் தங்கி இருக்கும் நட்சத்திர ஓட்டலிலும் பல்வேறு கட்ட சோதனைகளுக்குப் பின்னரே ஆட்கள் உள்ளே அனுமதிக்கப்படுகிறார்கள்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
