ஜி.வி. பிரகாஷ் குமாருக்கு விலையுயர்ந்த கைக்கடிகாரம் பரிசு
சிவகார்த்திகேயன் தான் நடித்த ‘அமரன்’ படத்திற்கு இசையமைத்த ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு விலையுயர்ந்த கைக்கடிகாரத்தைப் பரிசாக அளித்தார். ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய்பல்லவி நடிப்பில் திரைக்கு வந்துள்ள படம் ‘அமரன்’. இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தைப் பெற்று வருகிறது. மேலும் ஜி.வி. பிரகாஷ் குமாரின் இசையும் இந்தப் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது எனலாம். இதன் காரணமாக வலைத்தளங்களில் ஜி.வி. பிரகாஷுக்கும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.இந்நிலையில், ‘அமரன்’ பட நாயகனான சிவகார்த்திகேயன், ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு ஒன்றரை லட்சம் மதிப்புள்ள ஒரு விலையுயர்ந்த கைக்கடிகாரத்தைப் பரிசாக வழங்கியிருக்கிறார். இதுகுறித்த தகவலை தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்து இருக்கிறார் ஜி. வி. பிரகாஷ் குமார். இதே போல்தான் ‘விக்ரம்’ படம் வெற்றிபெற்ற போதும் சூர்யாவுக்கு ‘ரோலக்ஸ்’ கடிகாரம் ஒன்றை கமல்ஹாசன் பரிசாக அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
