மீண்டும் பிரபாஸுடன் இணையும் திரிஷா
பல படங்களில் தொடர்ந்து முன்னணி நடிகையாக நடித்து வரும் திரிஷா மீண்டும் பிரபாஸுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். ‘பொன்னியின் செல்வன்’ படத்திற்குப் பிறகு விஜய்யின் ‘லியோ’, ‘கோட்’ போன்ற படங்களில் நடித்த திரிஷா தற்போது அஜித்துடன் ‘விடாமுயற்சி’, ‘குட் பேட் அக்லி’, மணிரத்னத்தின் ‘தக் லைஃப்’ போன்ற படங்களில் நடிப்பதோடு, தெலுங்கில் சிரஞ்சீவியுடன் ‘விஸ்வாம்பரா’ உட்பட இரண்டு மலையாள படத்திலும் நடிக்கிறார்.இப்படி பல மொழிகளிலும் நடித்து வரும் திரிஷா, அடுத்தபடியாக சந்தீப் ரெட்டி வங்கா இயக்கும் படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார். தற்போது பிரபாஸ் நடித்து வரும் ‘ராஜா ஷாப்’ படத்திற்குப் பிறகு இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. ஏற்கெனவே பிரபாஸுக்கு ஜோடியாக தெலுங்கில் ‘பௌர்ணமி’, ‘புஜ்ஜி காடு’ போன்ற படங்களில் திரிஷா நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் நடிகர் பிரபாஸின் நடிப்பில் உருவாகவுள்ள ‘சலார் 2’ படத்தில் தென் கொரிய சினிமாவின் உச்ச நடிகராக உள்ள நடிகர் டான் லீ நடிக்கவுள்ளார் என்ற தகவல் அதிகாரப்பூர்வமாக டான் லீயின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தியாவில் தென் கொரிய படங்களுக்கும் நடிகர்களுக்கும் நல்ல வரவேற்பு எப்போதும் இருந்து வருகிறது. அந்த வகையில் நடிகர் டான் லீ ‘சலார்’ படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கவுள்ள தகவல் பிரபாஸ் ரசிகர்களை மட்டும் இல்லாமல், டான் லீ ரசிகர்களையும் உற்சாகப்படுத்தியுள்ளது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
