அஜித் பாணியில் கமல் எடுத்த முடிவு
அஜித் தன்னை ‘தல’ என்று அழைக்கவேண்டாம் என்று ரசிகர்களிடம் கேட்டுக்கொண்டதைப் போல தற்பொழுது கமல்ஹாசனும் தன்னை ‘உலக நாயகன்’ என்று அழைக்கவேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.நடிகர் அஜித்குமாரை அவரது ரசிகர்கள் ‘தல’ எனக் குறிப்பிட்டு கொண்டாடி வரும் நிலையில் கடந்த 2021ஆம் ஆண்டு தன்னை ‘தல’ என அழைக்கவேண்டாம் என ஊடகங்கள் மற்றும் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்து அறிக்கை வெளியிட்டார். அஜித், அஜித்குமார் அல்லது தனது பெயரின் சுருக்கமான ‘ஏகே’ என்று அழைத்தால் போதும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.ரசிகர்கள் தங்களுக்குச் சூட்டும் அடைமொழியை மற்ற நடிகர்கள் பெருமையாகக் கருதும் நிலையில், அஜித்தின் இந்த முடிவு அப்போது பரபரப்பாகப் பேசப்பட்டது.இந்நிலையில், நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசனும் இதே பாணியை தற்போது கையில் எடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “என் மீது கொண்ட அன்பினால் ‘உலக நாயகன்’ உட்பட பல பிரியம் ததும்பும் பட்டங்களால் என்னை அழைக்கிறீர்கள். இதனால் மகிழ்ந்திருக்கிறேன், நெகிழ்ந்திருக்கிறேன். “நிறைய யோசனைக்குப் பிறகு மேலே குறிப்பிட்டது போன்ற பட்டங்களையும் அடைமொழிகளையும் துறப்பது என்ற முடிவுக்கு வந்துள்ளேன். எனவே, ரசிகர்கள், ஊடக நண்பர்கள், திரைத்துறையைச் சார்ந்தவர்கள், மநீம கட்சித் தொண்டர்கள், சக இந்தியர்கள் உட்பட அனைவரும் என்னை கமல்ஹாசன் என்றோ, கமல் என்றோ, ‘கே ஹெச்’ என்றோ குறிப்பிட்டால் போதுமானது என கேட்டுக்கொள்கிறேன்,” என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
