நாடாளுமன்ற வாக்கெடுப்பில் பிரதமர் பதவியைத் தக்கவைத்த இஷிபா
தோக்கியோ: ஜப்பானியப் பிரதமராக ஷிகேரு இஷிபா தொடர அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் திங்கட்கிழமை (நவம்பர் 11) ஆதரவளித்தனர்.முறைகேட்டால் களங்கம் அடைந்துள்ள அவரின் கூட்டணி, அக்டோபரில் நடந்த கீழவைத் தேர்தலில் நாடாளுமன்றப் பெரும்பான்மையை இழந்தது. அக்டோபர் 1ஆம் தேதி பிரதமராகப் பதவியேற்ற பிறகு நாடாளுமன்றத்தில் திடீர் வாக்களிப்புக்கு அறைகூவல் விடுத்த திரு இஷிபா, வலுவற்ற சிறுபான்மை அரசாங்கத்தை இப்போது வழிநடத்த வேண்டும். 465 இடங்களைக் கொண்ட கீழவையில் 221 இடங்களை வென்று எதிர்பார்த்தபடி அவர் பதவியைத் தக்கவைத்துக்கொண்டார்..குறைந்த செல்வாக்கு உடைய மேலவைக்கும் 2025ல் தேர்தல் நடத்தப்படும். அதற்குள் திரு இஷிபா தமது அரசாங்கத்தின்மீது மக்களின் நம்பிக்கையைத் திரட்ட வேண்டும்.அனைத்துலக அரங்கில் அவருக்காக சில முக்கிய நிகழ்வுகளும் காத்திருக்கின்றன. பிரேசிலில் நவம்பர் 18, 19ஆம் தேதிகளில் நடைபெறும் ஜி20 மாநாடும் அவற்றில் அடங்கும்.




காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
