டிரம்ப்பின் வெற்றி இந்தியாவை அச்சுறுத்தாது: ஜெய்சங்கர்
மும்பை: இவ்வாண்டின் அமெரிக்க அதிபர் தேர்தலில் திரு டிரம்ப் வெற்றிபெற்றது பல நாடுகளுக்கிடையே அச்சத்தை ஏற்படுத்தியிருந்தாலும் அவரின் வெற்றி இந்தியாவுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் கூறியுள்ளார்.மும்பை நகரில் நடைபெற்ற கல்வி உபகாரச் சம்பளம் தொடர்பான நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பல அமெரிக்க அதிபர்களுடன் வலுவான உறவை வளர்த்துக்கொண்டுள்ளதாகக் குறிப்பிட்டார். “பிரதமர் மோடி முதன்முறையாக வாஷிங்டனுக்குப் பயணம் மேற்கொண்டபோது பராக் ஒபாமா அமெரிக்க அதிபராக இருந்தார். பின்னர் டோனல்ட் டிரம்ப், ஜோ பைடன் ஆகியோர் அப்பொறுப்பை வகித்தனர். திரு மோடி அத்தகைய நெருங்கிய உறவுகளை எளிமையான முறையில் வளர்த்துக்கொள்கிறார். இப்போது பல நாடுகள் அமெரிக்காவை எண்ணி அச்சப்படுகின்றன. ஆனால், உண்மையைச் சொன்னால் நாங்கள் அத்தகைய நாடுகளில் ஒன்றல்ல,” என்றார் திரு ஜெய்சங்கர்.திரு டிரம்ப், தேர்தலில் வெற்றிபெறப்போவது தெரிந்தபிறகு அவருக்கு முதலில் வாழ்த்து தெரிவித்த மூன்று உலகத் தலைவர்களில் திரு மோடியும் ஒருவர். இதற்கிடையே, உலகில் இருக்கக்கூடிய பல வகையான வாய்ப்புகளை ஆராய இந்தியா விரும்புவதாகவும் திரு ஜெய்சங்கர் தெரிவித்தார். சுற்றுலா, கல்வி உள்ளிட்ட துறைகள் அவற்றில் அடங்கும்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
