பிலிப்பீன்சைப் பயமுறுத்தும் நான்காவது புயல்: 2,500 கிராமங்களுக்கு எச்சரிக்கை
மணிலா: கடுமையான டோரஜி புயலின் சீற்றம் காரணமாக பிலிப்பீன்ஸின் 2,500 கிராமங்களைச் சேர்ந்த குடியிருப்பாளர்களை பத்திரமான இடத்திற்கு மாற்ற உத்தரவிடப்பட்டு உள்ளது.நாட்டின் வடக்குப் பகுதியில் உருவாகி இருக்கும் டோரஜி, ஒரு மாத காலத்தில் பிலிப்பீன்ஸை சீர்குலைக்கும் நான்காவது புயல் ஆகும்.ஏற்கெனவே உருவான டிராமி, கோங்-ரி, யின்ஸின் ஆகிய கடுமையான புயல்களில் இருந்து தப்பிக்க 700,000 பேர் நிவாரண முகாம்களிலும் உறவினர்களின் வீடுகளிலும் தஞ்சம் புகுந்துள்ளனர்.புயல் காற்றின் சீற்றத்தில் அவர்களின் வீடுகள் முற்றாகச் சேதமடைந்துவிட்டன.அந்த மூன்று புயல்களிலும் சிக்கி 159 பேர் மாண்டுவிட்டனர். புதிதாக உருவாகி இருக்கும் டோரஜி திங்கட்கிழமை (நவம்பர் 11) பிலிப்பீன்சைத் தாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.அதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இலோகோஸ், காகயான் வேலி, கார்டிலேரா போன்ற வட்டாரங்களைச் சேர்ந்த 2,500 கிராமங்களில் வசிக்கும் மக்கள் வேகமாக வெளியேற உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.உள்ளாட்சி நிர்வாகச் செயலார் ஜோன்விக் ரெமுல்லா இதனைத் தெரிவித்தார்.




காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
