மலேசியா தேர்தலில் பக்கத்தான்-தேசிய முன்னணி கூட்டணி தொடரும்: ஆண்டனி லோக் ஆருடம்
ஷா ஆலம்: மலேசியாவின் அடுத்த பொதுத் தேர்தலிலும் பக்கத்தான் ஹரப்பான்-தேசிய முன்னணி கூட்டணி தொடர வாய்ப்பு உள்ளது என்று ஜனநாயக செயல் கட்சி (டிஏபி) தலைமைச் செயலாளர் ஆண்டனி லோக் கணித்துள்ளார்.2028ஆம் ஆண்டு மலேசியாவின் 16வது பொதுத் தேர்தல் நடைபெறவிருக்கிறது.ஒரு காலத்தில் அரசியல் வைரிகளாக இருந்த பக்கத்தான் ஹரப்பானும் தேசிய முன்னணியும் தற்போது கூட்டாக ஆட்சி செய்து வருகின்றன.ஆனால் கூட்டணி தொடர்வதற்கு சில நிபந்தனைகளும் இருப்பதாக அவர் கூறினார். தேசியத் தேர்தலில் முக்கிய பிரச்சினையாக இருக்கும் மலேசியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் வாழ்க்கைச் செலவு, பணவீக்கத்தை கையாள்வதைப் பொறுத்து சாத்தியமான கூட்டணி அமையும் என்றார் திரு லோக்.தற்போதைய ஒற்றுமை அரசாங்கம், பொருளியல் சூறாவளியிலிருந்து மலேசியாவை மீட்டெடுப்பதும் அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.“அடுத்த மூன்று ஆண்டுகளில் நமது பொருளியலின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கவனம் செலுத்துவது மட்டுமல்லாமல் பணவீக்கத்தையும் வாழ்க்கைச் செலவினங்களையும் கட்டுப்படுத்தி மக்களுக்கு நல்வாழ்வை வழங்க முடிந்தால் அடுத்த தேர்தலுக்குள் நாடு சரியான திசையில் செல்வதாக பெரும்பான்மை மலேசியர்கள் உணர்வார்கள். ஒட்டுமொத்த மக்களும் தங்கள் வாழ்க்கை முன்பைவிட மேம்பட்டதாக இருக்கும் என்பதையும் நம்புவார்கள்.“இவற்றை நம்மால் சாதிக்க முடிந்தால் தற்போதைய அரசாங்கம், தேர்தலில் வெற்றி பெற்று புத்ரஜெயாவில் அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்ள முடியும்,” என்று தாம் நம்புவதாக திரு ஆண்டனி லோக் மேலும் தெரிவித்தார்.சிலாங்கூரில் ஜனநாயக செயல் கட்சி மாநாட்டில் அவர் பேசினார்.இந்த மாநாடு, ஐடியல் மாநாட்டு மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை நவம்பர் 10ஆம் தேதி நடைபெற்றது.டிஏபி துணைத் தலைவர் தெரசா கோக்குக்கும் அம்னோ இளையர் அணித் தலைவர் டாக்டர் முகமட் அக்மல் சாலேவுக்கும் இடையிலான மோதல், கூட்டணியைப் பாதிக்குமா என்று லோவிடம் கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், அரசியலில் இதுவெல்லாம் வழக்கமானதே என்றார்.




காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
