மாஸ்கோ மீது உக்ரேன் தாக்குதல்
மாஸ்கோ: உக்ரேன், ஞாயிற்றுக்கிழமையன்று (நவம்பர் 10) மாஸ்கோவை நோக்கி 25 வானூர்திகளைப் பாய்ச்சித் தாக்குதல் நடத்தியது.அதன் காரணமாக மாஸ்கோவின் முக்கிய விமான நிலையங்களில் இரண்டை மூட நேரிட்டது என்று ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்தனர். இதுவே ரஷ்யத் தலைநகர் மாஸ்கோ மீது உக்ரேன் நடத்தியிருக்கும் ஆகப் பெரிய வானூர்தித் தாக்குதலாகும்.மாஸ்கோவின் ராமஸ்கோய, கொலொமென்ஸ்கி (Ramenskoye, Kolomensky) வட்டாரங்களில் அந்த வானூர்திகள் அழிக்கப்பட்டதாக அந்நகர மேயர் செர்ஹெய் சொப்யானின் கூறினார். மாஸ்கோவின் ஒட்டுமொத்த மக்கள்தொகை 21 மில்லியனுக்கும் அதிகமாகும். “முதலில் எங்களுக்குக் கிடைத்த தகவல்களின்படி வானூர்திகளின் இடிபாடுகள் விழுந்த இடங்களில் சேதமோ உயிரிழப்போ ஏதும் இல்லை,” என்று திரு சொப்யானின் டெலிகிராம் செயலிவழி தெரிவித்தார். அந்த இடங்களில் அவசரச் சேவையாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.ராமஸ்கோய வட்டாரம், கிரெம்லினுக்குத் தென்கிழக்கே சுமார் 45 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. கடைசியாக கடந்த செப்டம்பர் மாதம் அப்பகுதி மீது உக்ரேன் தாக்குதல் நடத்தியது. அப்போதைய நிலவரப்படி அதுவே உக்ரேன், மாஸ்கோ மீது மேற்கொண்ட ஆக மோசமான தாக்குதலாக இருந்தது. அதில் ரஷ்ய ஆகாயத் தற்காப்புப் பிரிவுகள் 20 வானூர்திகளை அழித்தன.




காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
