மேற்கு வங்கத்தில் மாண்டு கிடந்த பாஜக தலைவர்
கோலகத்தா: இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சித் (பாஜக) தலைவர் ஒருவர் அக்கட்சியின் அலுவலகத்தில் மாண்டுகிடந்தார்.மேற்கு வங்கத்தில் உள்ள உஸ்தி நகரில் இருக்கும் பாஜக அலுவலகத்தில் பிருத்விராஜ் நஸ்கார் என்பவரின் சடலம் காணப்பட்டது. அந்நகர் இருக்கும் மாவட்டத்தில் பாஜகவின் சமூக ஊடகக் கணக்கை அவர் கவனித்து வந்தார் என்று இந்தியா டுடே உள்ளிட்ட ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.சம்பவத்தைத் தொடர்ந்து பாஜக, மேற்கு வங்கத்தின் ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரசைக் குறைகூறியது. அதேவேளை, பிருத்விராஜ் நஸ்காரின் மரணம் தொடர்பில் பெண் ஒருவரைக் கைது செய்த காவல்துறையினர், கொலைக்குப் பின்னால் தனிப்பட்ட காரணங்கள் இருக்கக்கூடும் என்று தெரிவித்தனர்.ரத்தத்தில் ஊறியபடி இருந்த திரு நஸ்காரின் உடல், வெள்ளிக்கிழமையன்று (நவம்பர் 8) கட்சி அலுவலகத்தில் காணப்பட்டது. இம்மாதம் ஐந்தாம் தேதியிலிருந்து நஸ்காரைக் காணவில்லை என்று அவரின் குடும்பத்தார் கூறியிருந்தனர்.நஸ்காரைக் கூரான ஆயுதங்களால் தாக்கியதாகவும் அதனைத் தொடர்ந்து அவர் மாண்டதாகவும் கைதான பெண் ஒப்புக்கொண்டார் என்று காவல்துறை தெரிவித்தது. மாண்டவருக்கும் கைதானவருக்கும் இருக்கக்கூடிய தொடர்பு, அவர்களுக்கிடையே ஏற்பட்டிருக்கக்கூடிய தகராறு போன்ற கண்ணோட்டங்களில் விசாரணை நடத்துவதாகவும் காவல்துறையினர் குறிப்பிட்டனர்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
